
ஜப்பான் பிரதமர் தேர்தலில் சனே டக்காச்சி வெற்றி
ஜப்பான் பிரதமராக கடந்த ஒக்டோபரில் பதவியேற்ற சனே டக்காச்சிக்கு (Sanae Takaichi) மக்களிடையே 70 சதவீதத்துக்கும் அதிகமான ஆதரவு நிலவி வந்தது.
இருப்பினும், பாராளுமன்றத்தில் அவரது கூட்டணிக்குக் குறைந்த பெரும்பான்மை மட்டுமே இருந்தது.
தனது பொருளாதார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளை தடையின்றி அமல்படுத்தவும், அரசியல் செல்வாக்கை உறுதிப்படுத்தவும் முன்கூட்டியே பொதுத் தேர்தலை நடத்த அவர் முடிவு செய்தார்.
வரவு–செலவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டிய காலகட்டத்தில் தேர்தலை அறிவிப்பது நாட்டின் நிர்வாகத்தை பாதிக்கும் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.
இதற்கு பதிலளித்த பிரதமர், புதிய அரசு அமைந்தவுடன் உடனடியாக வரவு–செலவு திட்டம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்தார்.
இதனையடுத்து ஜப்பான் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. அதற்கான உத்தரவை பிரதமர் சனே டக்காச்சி பிறப்பித்தார். தொடர்ந்து, பெப்ரவரி 8ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றது.
இந்தத் தேர்தலில் ஆளும் லிபரல் டெமோக்ராட்டிக் கட்சி (LDP) 465 இடங்களில் 352 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பெற்றது.
இதன் மூலம், மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் ஜப்பான் பிரதமர் என்ற வரலாற்றுச் சிறப்பை சனே டக்காச்சி பெற்றுள்ளார்.

