சீனாவில் செயல்பட்டு வந்த ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு

சீனாவில் செயல்பட்டு வந்த ரசாயன நிறுவனத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 பேர் உயிரிழப்பு

சீனாவின் வடக்கு பகுதியிலுள்ள ஷான்க்சி மாகாணத்தின் ஷான்யின் கவுண்டி பகுதியில், ஷூசோ நகரில் இயங்கி வந்த ஒரு உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தில் நேற்று (08) காலை திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததையடுத்து மீட்பு குழுவினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்பு பணிகளை முன்னெடுத்தனர்.

இதன்போது, ஒரு பகுதியில் 5 உடல்கள் மீட்கப்பட்டதுடன், வேறொரு பகுதியில் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், மற்றொரு இடத்தில் ஒருவரின் உடல் மீட்கப்பட்டது.

இதனையடுத்து, இந்த வெடிவிபத்து சம்பவத்தில் சிக்கி மொத்தம் 8 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )