
வரலாற்று சிறப்பு மிக்க தெவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி ஆறாவது நாளாக தொடர்கிறது
இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று (10) ஆறாவது நாளாக தொடர்கிறது.
இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தேவ்னிமோரி ஆலயத்தில் கண்டெடுக்கப்பட்ட லோவ்துரா புத்தரின் சர்வக்ஞ உடல் நினைவுச்சின்னம், கடந்த 4ஆம் திகதி இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு ஹுனுபிட்டிய கங்காராம விஹாரையில் விசேட பீடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கடந்த 5ஆம் திகதி முதல் பக்தர்கள் இந்தப் புனித நினைவுச்சின்னத்தை வழிபடும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
எதிர்வரும் 11ஆம் திகதி காலை 7.00 மணி வரை, 24 மணி நேரமும் பக்தர்கள் புத்த பெருமானின் புனித நினைவுச்சின்னத்தை வழிபடும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

