ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் இன்று கூடியது

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை ஜனாதிபதி தலைமையில் இன்று கூடியது

ஜனாதிபதி நிதியத்தின் நிர்வாக சபை இன்று (10) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் கூடியது.

இந்த நிர்வாக சபையில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட இரண்டு உறுப்பினர்கள் உட்பட மொத்தம் ஏழு உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.

இக்கூட்டத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஜனாதிபதியின் செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான ரோஷன் கமகே, பேராசிரியர் ஜே.ஆர்.பி. ஜெயக்கொடி, முன்னாள் கணக்காய்வாளர் நாயகம் சரத் சந்திர சிறி மாயாதுன்னே உள்ளிட்டோர் மற்றும் ஜனாதிபதி நிதியத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிர்வாக சபைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )