பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்

பாகிஸ்தானுக்கு நன்றி தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத்

2026 ஆம் ஆண்டு நடைபெறும் உலக இருபதுக்கு 20 (T20) கிரிக்கெட் தொடரின் கீழ் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் அணி எடுத்த முடிவை இலங்கை வரவேற்றுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹெராத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) கணக்கில் அவர் வெளியிட்டுள்ள குறிப்பில், இலங்கையின் கோரிக்கையை நேர்மறையாக பரிசீலித்ததற்காக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த முடிவு விளையாட்டுத்திறன், நட்பு மனப்பான்மை மற்றும் இருதரப்பு உறவுகளின் வலிமையை வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நடவடிக்கை பிராந்தியத்தில் விளையாட்டு மூலமான ஒத்துழைப்புக்கும் நல்லுறவுகளுக்கும் புதிய ஊக்கமாக அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )