மட்டக்களப்பில் கசிப்புடன் மூவர் கைது

மட்டக்களப்பில் கசிப்புடன் மூவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவிலங்கத்துறை களப்பு பகுதியை அண்டிய வாவியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா மற்றும் 50,000 மில்லி லீட்டர் கசிப்புடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் விசேட பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது ஆரையம்பதி பகுதியைச் சேர்ந்த இருவரும், மாவிலங்கத்துறையைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

மேலும், 14 இலட்சம் மில்லி லீட்டர் கோடா, 50 ஆயிரம் மில்லி லீட்டர் கசிப்பு, கோடா பரல்கள் மற்றும் கசிப்பு வடிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட கலன்கள் உள்ளிட்ட பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும், கைப்பற்றப்பட்ட பொருட்களும் சட்ட நடவடிக்கைகளுக்காக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )