பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா!

பாகிஸ்தானை வீழ்த்தி சுப்பர் 8 சுற்றுக்கு தகுதிப் பெற்ற இந்தியா!

2026 உலகக் கிண்ண T20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் வெற்றி பெற்று Super 8 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் நேற்று (15) இடம்பெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, 20 ஓவர்கள் நிறைவில் ஏழு விக்கெட்டுக்களை இழந்து 175 ஓட்டங்களைக் குவித்தது.

இந்திய அணி சார்பில் இஷான் கிஷன் அதிரடியாக 77 ஓட்டங்களையும் அணித்தலைவர் சூர்யகுமார் யாதவ் 32 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

தொடர்ந்து 176 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கிப் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி, இந்திய அணியின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 114 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

பாகிஸ்தான் சார்பில் உஸ்மான் கான் அதிகபட்சமாக 44 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணி சார்பில் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தி வெற்றியை உறுதி செய்தனர்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியின் மூலம் இந்திய அணி “A” குழுவிலிருந்து “சுப்பர் 8 (Super 8)” சுற்றுக்குத் தகுதி பெற்ற முதல் அணியாகத் தனது இடத்தைப் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )