
கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர் ஆர்ப்பாட்டம் ; போக்குவரத்து பாதிப்பு
களனி பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர் களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியினால் பல்கலைக்கழகத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குமாரதுங்க முனிதாச மாவத்தையின் ஒரு வழிப்பாதையில் வாகனப் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக விடுதிகளை இரவு 10:00 மணிக்கு மூடுவதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே மாணவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

