
108 ஆமை முட்டைகளுடன் ஒருவர் கைது
பலப்பிட்டிய – ரந்தொபே பகுதியில் 108 ஆமை முட்டைகளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இக்கைது நடவடிக்கை இன்று (17) இலங்கை கடலோர காவற்படை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்ட 108 ஆமை முட்டைகள் உட்பட அவர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக அம்பலாங்கொடை பொலிஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
CATEGORIES Sri Lanka

