வங்காளதேசத்தின் புதிய பிரதமருக்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருக்கும் இடையே  கலந்துரையாடல்

வங்காளதேசத்தின் புதிய பிரதமருக்கும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சருக்கும் இடையே கலந்துரையாடல்

வங்காளதேசத்தின் புதிய பிரதமர் தாரிக் ரஹ்மான் மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்தா ஜயதிஸ்ஸ இடையே நேற்று (17) பிற்பகல் விசேட கலந்துரையாடல் ஒ்ற நடைபெற்றது.

அப்போது, ​​இலங்கையின் சார்பாக வங்காளதேசத்தின் புதிய பிரதமருக்கு அமைச்சர் வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, சமீபத்திய தித்வா சூறாவளியின் போது இலங்கைக்கு வங்காளதேசம் வழங்கிய ஆதரவிற்கும் நன்றிளைத் தெரிவித்தார்.

மேலும், இலங்கைக்கு அதிகமான வங்காளதேச சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துதல், சுற்றுலாத் துறையை மேலும் மேம்படுத்துதல் மற்றும் மருந்துப் பொருட்களுக்கான முதலீட்டு வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் குறித்தும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

வங்காளதேசத்திற்கான இலங்கை உயர் ஸ்தானிகர் தர்மபால வீரக்கொடியும் இந​ நிகழ்வில் கலந்து கொண்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )