சூப்பர் 8 சுற்றில் இன்று நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை !

சூப்பர் 8 சுற்றில் இன்று நியூஸிலாந்து – பாகிஸ்தான் பலப்பரீட்சை !

ஐசிசி டி20 உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடரின் அடுத்த கட்டமான சூப்பர் 8 சுற்று இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

அதன்படி, இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்​.பிரேம​தாச மைதானத்தில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்​றின் முதலாவது போட்டியில் நியூஸிலாந்து அணி பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடர் இந்​தியா மற்​றும் இலங்​கை​யில் நடை​பெற்று வரு​கிறது.

20 அணி​கள் கலந்​து​கொண்​டுள்ள இந்த கிரிக்​கெட் தொடரில் லீக் சுற்றுகள் நேற்றுடன் (20) முடிவடைந்​துள்​ளன.

லீக் சுற்றின் முடி​வில் ‘ஏ’ பிரி​வில் இந்​தி​யா, பாகிஸ்​தான், ‘பி’ பிரிவில் ஜிம்​பாப்​வே, இலங்கை, ‘சி’ பிரி​வில் மேற்கு இந்தியத் தீவு​கள், இங்கிலாந்​து, ‘டி’ பிரி​வில் தென் ஆப்பிரிக்​கா, நியூஸிலாந்து ஆகிய 8 அணி​கள் சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியுள்ளன.

இந்த 8 அணி​களும் குரூப் 1, குரூப் 2 என இரு பிரிவு​களாக பிரிக்​கப்​பட்​டுள்​ளது.

இதில் குரூப் 1-ல் இந்​தி​யா, ஜிம்பாப்வே, தென் ஆப்​பிரிக்​கா, மேற்கு இந்​தி​யத் தீவு​கள் அணி​கள் இடம் பெற்​றுள்​ளன.

குரூப் 2-ல் நியூஸிலாந்​து, பாகிஸ்​தான், இங்​கிலாந்​து, இலங்கை ஆகிய அணி​களும் இடம் பெற்​றுள்​ளன. இதில் ஒவ்​வொரு பிரி​விலும் இடம் பெற்​றுள்ள அணி தனது பிரி​வில் உள்ள மற்ற அணி​களு​டன் தலா ஒரு முறை மோதும்.

புள்​ளி​கள் அடிப்​படை​யில் முதல் 2 இடங்​களை பிடிக்​கும் அணி​கள் அரை இறு​திக்கு முன்னேறும்.

இந்​நிலை​யில் சூப்​பர் 8 சுற்று இன்று தொடங்​கு​கிறது. இதன் முதல் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொழும்பு ஆர்​.பிரேம​தாசா மைதானத்​தில் நடைபெறவுள்ளது.

இந்த போட்டியில் பாகிஸ்தான், நியூஸிலாந்​துடன் மோதுகிறது.

நியூஸிலாந்து அணி நடப்பு தொடரில் தனது லீக் ஆட்​டங்​களை இந்​தி​யா​வில் விளை​யாடிய நிலையில் தற்​போது சூப்​பர் 8 சுற்று ஆட்​டங்​களை சுழற்​பந்து வீச்​சுக்கு சாதக​மான இலங்கை ஆடு​களங்​களில் விளையாட உள்​ளது.

மறுபுறம் சல்​மான் அலி ஆகா தலை​மையி​லான பாகிஸ்தான் அணி தனது லீக் ஆட்டங்களை முழு​மை​யாக இலங்​கை​யில் விளை​யாடி உள்​ள​தால் ஆடு​களத்​தின் தன்​மையை நன்கு அறிந்திருக்கக்​கூடும்.

இந்த வகை​யில் பாகிஸ்​தான் அணி​யின் பந்து வீச்சாளர்கள், குறிப்​பாக சுழற்​பந்து வீச்​சாளர்​கள், மந்தமான ஆடு​களத்​தில் திறம்பட செயல்பட தேவை​யான வேகம் மற்​றும் நீளத்தை அறிந்​து​வைத்​துள்​ளனர்.

இது பாகிஸ்தான் அணிக்கு சாதக​மாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )