
நீண்ட நாள் காதலியை கரம் பிடித்தார் ஷிகர் தவான்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஷிகர் தவான், தனது நீண்டகால காதலியான அயர்லாந்தைச் சேர்ந்த சோஃபி ஷைனை திருமணம் செய்துள்ளார்.
இந்த திருமணம் டெல்லி–என்சிஆர் பகுதியில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்ற தனியார் நிகழ்வாக நடைபெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
திருமண விழாவின் புகைப்படங்களை இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த திருமண செய்தி ரசிகர்கள் மத்தியில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.
CATEGORIES Sports News

