
இலங்கைக்கு 147 வெற்றியிலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து
இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில், இலங்கை அணி பங்கேற்கும் முதல் போட்டி இன்று (22) இடம்பெறுகின்றது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 146 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.
இதன்படி, இலங்கைக்கு 147 வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

