பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு

பிரிட்ஜில் வைத்த உணவை சாப்பிட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், குற்றப்புரம் அருகே எடச்சலம் பகுதியைச் சேர்ந்த ஹக்கீம் – ஷஹ்லா தம்பதியின் 7 வயது மகள் லஸ்னா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தன்று மாலை, பிரிட்ஜில் வைத்திருந்த உணவை குடும்பத்தினர் சாப்பிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து லஸ்னா மற்றும் குடும்பத்தினருக்கு திடீரென வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

உடனடியாக அவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். எனினும் சிகிச்சை பலனின்றி லஸ்னா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற குடும்பத்தினருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரிட்ஜில் பதப்படுத்தி வைத்திருந்த உணவு கெட்டுப்போனதன் காரணமாக உணவுப் புழுக்கம் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தகவல் அறிந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் ஹக்கீமின் வீட்டிற்கு சென்று, அவர்கள் சாப்பிட்ட உணவின் மாதிரிகளை சேகரித்து ஆய்வக பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர்.

சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )