நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 823 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 823 பேர் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நாட்டில் போதைப்பொருள் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டத்தின் கீழ் நேற்று (23) விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த சோதனைகளின் போது சுமார் 823 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 11 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 07 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் மொத்தமாக 826 சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதுடன், 11 பேரை புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்ப பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கைகளின் போது சந்தேகநபர்களிடமிருந்து குறிப்பிடத்தக்க அளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதன்படி 246 கிராம் ஹெரோயின், 385 கிராம் ஐஸ், 7 கிலோகிராம் 759 கிராம் கஞ்சா, 15,639 கஞ்சா செடிகள், 17 கிராம் ஹஷீஷ், 506 போதை மாத்திரைகள், 14 கிலோகிராம் 164 கிராம் 960 மில்லிகிராம் மதனமோதகம் மற்றும் 3 கிலோகிராம் 18 கிராம் மாவா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றும், பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை பொலிஸாருக்கு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )