கடல் அட்டைகளுடன் சந்தேக நபர் கைது

 கடல் அட்டைகளுடன் சந்தேக நபர் கைது

கற்பிட்டி முகத்துவாரம் கடற்பகுதியில் நேற்று (23) இலங்கை கடற்படை மேற்கொண்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையில், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 685)கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் ஒரு டிங்கி படகு கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும் இலங்கை கடற்படை கப்பல் விஜய மேற்கொண்ட சோதனையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகு ஒன்றை தடுத்து நிறுத்தி பரிசோதித்ததில் குறித்த உலர்ந்த கடல் அட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேகநபர், பறிமுதல் செய்யப்பட்ட உலர்ந்த கடல் அட்டைகள் மற்றும் டிங்கி படகு ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கட்டுநாயக்க அமைந்துள்ள சுங்கத் தடுப்பு அலுவலகம் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )