மகளிர் T20 உலக கிண்ண அட்டவணை வெளியீடு !

மகளிர் T20 உலக கிண்ண அட்டவணை வெளியீடு !

இந்த ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் T20 உலகக் கிண்ண தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

இந்தத் தொடர் எதிர்வரும் ஜூன் மாதம் 12ஆம் திகதி இங்கிலாந்தில் உள்ள Edgbaston மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

குழு 1-ல் இந்தியா, பாகிஸ்தான், அவுஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நெதர்லாந்து அணிகளும், குழு 2-ல் மேற்கிந்திய தீவுகள் , இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தொடரில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்கின்றன.

சமீபத்தில் நேபாளத்தில் நடைபெற்ற தகுதிச்சுற்றுப் போட்டிகள் மூலம் பங்களாதேஷ் , அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 4 அணிகள் உலகக்கிண்ண தொடருக்கு தகுதி பெற்றன.

image
image
CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )