வாகன விபத்தில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன இளம் தம்பதியினர் பலி

வாகன விபத்தில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன இளம் தம்பதியினர் பலி

தம்புள்ளை, யாபாகம பகுதியில் இடம்பெற்ற துயரமான வாகன விபத்தில் திருமணமாகி மூன்று மாதங்களே ஆன இளம் தம்பதியினர் உயிரிழந்துள்ளனர்.

யாபாகம பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞனும், அவரது 22 வயது மனைவியும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

கண்டி – கொழும்பு பிரதான வீதியின் வதுபிடிவல பகுதியில், இவர்களின் மோட்டார் சைக்கிள் பஸ் ஒன்றுடன் மோதியதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உயிரிழந்த தம்பதியினரின் இறுதிக்கிரியைகள் நேற்று (24) யாபாகம பொது மயானத்தில், பெருந்திரளான உறவினர்கள் மற்றும் கிராம மக்களுக்கு மத்தியில் நடைபெற்றது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )