
ஈரானை கைப்பற்ற தயாராகும் டிரம்ப்
ஈரான் மக்களை தங்கள் அரசாங்கத்தை கைப்பற்றுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்
Truth Social தளத்தில் இன்று (28) டிரம்ப் வெளியிடப்பட்ட வீடியோவில் ,அமெரிக்க இராணுவ நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர் ஈரான் மக்கள் தங்களது அரசாங்க அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நாங்கள் எங்கள் பணியை முடித்ததும், உங்கள் அரசாங்கத்தை நீங்கள் கைப்பற்றுங்கள்.
அது உங்களுடையதாக மாறும். தலைமுறைக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இதுவாகும்.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் செய்யத் துணியாத நடவடிக்கையை நாம் மேற்கொண்டுள்ளளோம்.
பல ஆண்டுகளாக ஈரான் மக்கள் அமெரிக்க உதவியை எதிர்பார்த்திருந்தாலும் அது கிடைக்கவில்லை.
இன்று செய்யத் துணிந்ததை செய்ய எந்த ஜனாதிபதியும் தயாராக இல்லை.
இப்போது உங்களுக்கு விரும்பியதை வழங்கும் ஒரு தலைவர் கிடைத்துள்ளார்.
நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள் என்பதை பார்ப்போம்” என ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும் அவர், ஈரான் மக்களுக்கு ஆதரவாக அமெரிக்கா மிகப்பெரிய வலிமையுடன் நிற்கும் என்றும், தங்களது எதிர்காலத்தை தாங்களே தீர்மானிக்க இது சரியான தருணம் என்றும் தெரிவித்துள்ளார்.

