இன்று இரவு 09:13 முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இன்று இரவு 09:13 முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களைத் தொடர்ந்து, இலங்கையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்கசிபெட்கோ நிறுவனம் (CEYPETCO) தீர்மானித்துள்ளது.

இன்று இரவு 09:13 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த விலை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டோ டீசல் 4 ரூபாயால் அதிகரித்து ரூ.281 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 1 ரூபாயால் அதிகரித்து ரூ.293 ஆகவும், சுப்பர் டீசல் 6 ரூபாயால் அதிகரித்து 329 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒக்டேன் 95 மற்றும் மண்ணெண்ணெய் விலையில் எந்த மாற்றமும் இல்லை

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )