ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

ஈரான் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதிநிஜாத் அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழப்பு

2005 முதல் 2013 வரை ஈரானின் ஜனாதிபதியாக பணியாற்றிய மஹ்மூத் அஹ்மதிநிஜாத் (Mahmoud Ahmadinejad), அமெரிக்க மற்றும் இஸ்ரேலியத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடகிழக்கு தெஹ்ரானின் ‘நார்னக்’ (Narnak) பகுதியில் அமைந்துள்ள அஹ்மதி நிஜாத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதியும் அவரது பாதுகாப்பு அதிகாரிகள் சிலரும் உயிரிழந்துள்ளதை ஈரான் ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி பதவியேற்பதற்கு முன்னர், அவர் அர்டபில் (Ardabil) மாகாணத்தின் ஆளுநராகவும், தெஹ்ரான் நகரின் மேயராகவும் பணியாற்றினார்.

ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்த பிறகு, ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனியினால்ஆலோசனைக் குழுவின்’ (Expediency Discernment Council) உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டார்.

உயர் தலைவரின் மறைவைத் தொடர்ந்து, ஈரான் அரசியலில் மற்றுமொரு பலமிக்க ஆளுமையாகத் திகழ்ந்த அஹ்மதிநிஜாத் இவ்வாறு கொல்லப்பட்டமை, அந்நாட்டு ஆட்சிமுறைக்கு விழுந்த பலத்த அடியாகக் கருதப்படுகிறது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )