ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

ஹோர்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

ஈரான் தனது முக்கியமான கடல் வழித்தடமான ஹார்முஸ் நீரிணையை மூடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த நீரிணை வழியாகச் செல்ல முயற்சிக்கும் எந்த நாட்டின் கப்பல்களாக இருந்தாலும் அவற்றுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அதியுயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஈரான் ஆயுதப்படைகள், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் இலக்குகளை குறிவைத்து பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாகவே ஹோர்முஸ் நீரிணை மூடல் அறிவிக்கப்படுவதாக தகவல்கள் கூறுகின்றன.

உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டால், சந்தையில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சர்வதேச அபாயம் நிலவுகிறது.

மேலும், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் மேலும் தீவிரமடையும் சாத்தியம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )