போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைது

போதைப்பொருட்களுடன் இரு பெண்கள் கைது

வெலிவேரிய, எம்பரலுவ பகுதியில் விசேட சுற்றிவளைப்பின் போது ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இரு பெண் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெலிவேரிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது 25 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும், போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 410,470 ரூபாய் பணத்துடன் மற்றொரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கொழும்பு 12 பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட இருவரும் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )