மத்திய கிழக்கு போர் தாக்கம் ; அடுத்த சில வாரங்கள் முக்கியம் – பாதுகாப்பு துணை அமைச்சர்

மத்திய கிழக்கு போர் தாக்கம் ; அடுத்த சில வாரங்கள் முக்கியம் – பாதுகாப்பு துணை அமைச்சர்

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அடுத்த சில வாரங்கள் நாட்டிற்கு மிகவும் முக்கியமான காலகட்டமாக இருக்கலாம் என்று பாதுகாப்பு துணை அமைச்சர் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நிலைமையால் எதிர்காலத்தில் அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் எனக் கூறினார்.

தற்போதைய இராணுவ சூழ்நிலை காரணமாக கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் இந்த தாமதங்கள் உருவாகக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.

அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் வகையில், நாட்டில் அமலில் உள்ள அவசரகாலச் சட்டத்தை மேலும் நீட்டிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் துணை அமைச்சர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “தற்போதைய போர் சூழ்நிலை காரணமாக கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனால் நாம் எதிர்பார்த்த மற்றும் கோரிய அத்தியாவசிய சேவைகள் எதிர்காலத்தில் தாமதமாகலாம்.

அடுத்த சில வாரங்கள் மிகவும் முக்கியமானவை. அதனால் இந்த அத்தியாவசிய சேவைகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்,” எனக் கூறினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )