ஈரானை வழிநடத்த பகுத்தறிவும் விவேகமும் கொண்ட ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்

ஈரானை வழிநடத்த பகுத்தறிவும் விவேகமும் கொண்ட ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்

அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்ததாகக் கூறி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து தாக்குதலை மேற்கொண்டு வரும் நிலையில், ஈரானின் புதிய உச்ச தலைவர் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.

இந்த தாக்குதல்களில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பதிலடியாக ஈரான், இஸ்ரேல் மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததைத் தொடர்ந்து, அவரது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய உச்ச தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், மொஜ்தபா கமேனியை ஈரானின் உச்ச தலைவராக ஏற்க முடியாது என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:
ஈரான் தங்களது நேரத்தை வீணடித்து வருகிறது. அயதுல்லா அலி கமேனியின் கொள்கைகளைத் தொடரும் ஒருவரை ஈரானின் தலைவராக ஏற்க முடியாது. அது அமெரிக்காவை ஐந்து ஆண்டுகளில் மீண்டும் போருக்குத் தள்ளக்கூடும். எனவே மொஜ்தபா கமேனியை ஈரானின் புதிய தலைவராக ஏற்க முடியாது.

வெனிசுலாவில் நடந்ததைப் போல, ஈரானிலும் புதிய தலைவர் தேர்வில் நான் தனிப்பட்ட முறையில் ஈடுபட வேண்டிய நிலை உள்ளது.

ஈரானுக்கு அமைதியையும் நல்லிணக்கத்தையும் கொண்டு வரக்கூடிய ஒருவரை நாங்கள் விரும்புகிறோம். ஈரானை வழிநடத்த பகுத்தறிவும் விவேகமும் கொண்ட ஒருவரை தேர்வு செய்ய வேண்டும்.

மேலும், ஈரான் ராணுவமும் புரட்சி காவல்படையும் தங்களது ஆயுதங்களை கீழே வைக்க வேண்டும் என்றும், புதிய மற்றும் சிறந்த ஈரானை உருவாக்குவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.

அத்துடன், ஈரானுடனான போர் எவ்வளவு காலம் தொடரும் என்பதில் எந்த நேர வரம்பும் இல்லை என்றும், ஈரானிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் தற்போது அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய முன்வந்துள்ளதாலும், அந்த கோரிக்கை தாமதமாக வந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

அமெரிக்க ராணுவம் இஸ்ரேலிய படைகளுடன் நெருக்கமாக செயல்பட்டு வருவதுடன், ஈரானின் ஏவுகணை மற்றும் டிரோன் திறன்களை ஒவ்வொரு மணிநேரமும் அழித்து வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )