இலங்கையின் பாதுகாப்பில் இருந்து 240 ஈரான் கடற்படையினர் கட்டுநாயக்க ஊடாக மீண்டும் ஈரான் பயணம்

இலங்கையின் பாதுகாப்பில் இருந்து 240 ஈரான் கடற்படையினர் கட்டுநாயக்க ஊடாக மீண்டும் ஈரான் பயணம்

இலங்கையின் பாதுகாப்பின் கீழ் இருந்த ஈரான் கடற்படையைச் சேர்ந்த 240 பேர் இன்று (14) மீண்டும் ஈரானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பிற்கு அருகில் அமெரிக்கத் தாக்குதலுக்கு உள்ளான ஈரானின் ‘IRIS Dena’ கப்பலிலிருந்து மீட்கப்பட்ட 32 கடற்படையினரும், ஈரானிய கடற்படைக்குச் சொந்தமான ‘IRIS Bushehr’ கப்பலில் இருந்த 204 பேருமே இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) அருண ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இந்தக் கடற்படையினர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விசேட ‘டேர்கிஷ்’ (Turkish Airlines) விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )