புத்தாண்டு பருவகாலத்தை முன்னிட்டு கடந்த 03 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 163 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 10, 11 மற்றும் 12 ஆகிய திகதிகளில் மாத்திரம் அதிவேக நெடுஞ்சாலைகளில் 434,338 வாகனங்கள் பயணித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அனுராத ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 12 ஆம் திகதி மாத்திரம் 45 மில்லியன் ரூபாய்க்கும் அதிக வருமானம் கிடைத்துள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் ஏதேனும் விபத்து அல்லது தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளானால், 1969 என்ற அவசர அழைப்பு இலக்கத்திற்கு அறிவிக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )