வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது

வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீனப் பிரஜை கைது

சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் நேற்று (05) கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொள்ளுப்பிட்டி பகுதியில் கொழும்பு தெற்கு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த கைது மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 1,500 வெளிநாட்டு சிகரெட்டுகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டவர் 39 வயதுடைய சீன நாட்டுப் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்காக அவர் கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொள்ளுப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )