
மத்திய கிழக்கு பதற்றம் ; ஐசிசி பொதுச் சபைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைப்பு
கத்தாரின் தோஹாவில் நடைபெறவிருந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) பொதுச் சபைக் கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் இராணுவ பதற்ற நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் பொதுச் சபைக் கூட்டம் மார்ச் 25 முதல் 27 வரை கத்தாரின் தோஹாவில் நடைபெற திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போதைய பாதுகாப்பு சூழ்நிலையை கருத்தில் கொண்டு அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்தில் பொதுச் சபைக் கூட்டத்தை வேறு ஒரு நாட்டில் நடத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.

