
மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு
மத்திய கிழக்கின் முக்கிய எரிசக்தி உற்பத்தியாளர்கள் எண்ணெய் உற்பத்தியை குறைத்ததைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
நேற்றைய வர்த்தகத்தில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலரைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் போர் நிலை காரணமாக எண்ணெய் மற்றும் எரிவாயு போக்குவரத்திற்கான உலகின் மிக முக்கியமான கடல் பாதைகளில் ஒன்றான ஹோர்முஸ் ஜலசந்தி முடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்குப் பதிலடியாக மத்திய கிழக்கு எரிசக்தி உற்பத்தியாளர்கள் உற்பத்தி குறைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி பிரெண்ட் ரக மசகு எண்ணெயின் விலை 18 சதவீதம் உயர்ந்து பீப்பாய் ஒன்றின் விலை 108.68 அமெரிக்க டொலராக விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் அமெரிக்காவின் WTI ரக மசகு எண்ணெய் விலை சுமார் 20 சதவீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.
2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்த போது மசகு எண்ணெய் விலை 100 டொலரைத் தாண்டியது.
அதன்பின்னர் பதிவாகும் மிகப்பெரிய விலை உயர்வாக இதுவே கருதப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

