தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

தெற்கு லெபனானில் இஸ்ரேல் ட்ரோன் தாக்குதல் – ஒருவர் உயிரிழப்பு

லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள பிந்த் ஜ்பெயில் (Bint Jbeil) மாவட்டத்தின் டெயிர் அந்தார் (Deir Antar) நகரில் கார் ஒன்றை இலக்காகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இஸ்ரேல் ட்ரோன் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும், பெய்ரூத் நகர மையக் கடற்கரைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு வான்தாக்குதலில் 8 பேர் உயிரிழந்ததுடன் 31 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லெபனானின் பல பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல்கள் இடம்பெற்று வருவதால் அங்கு பாதுகாப்பு நிலைமை மேலும் பதற்றமாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )