
IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தின் வருடாந்திர இப்தார் நிகழ்ச்சி
IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனம் ஏற்பாடு செய்த இப்தார் நிகழ்ச்சி நேற்று (14) கொழும்பில் உள்ள மெரின் கிராண்ட் ஹோட்டலில் (Marine Grand Banquet Hall) நடைபெற்றது.
இந்த நிகழ்வு IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனத்தின் தவிசாளரும் ஜனனம் அறக்கட்டளையின் தலைவருமான கலாநிதி வி. ஜனகன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சிறப்பு அதிதிகளாக இலங்கைக்கான மலேசிய உயர் ஸ்தானிகர், மூத்த வழக்கறிஞர் ரஸ்டி ஹபீப், இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் முன்னாள் இடைக்காலத் தலைவர் மற்றும் சவுதி அரேபியாவின் ஜித்தாவிற்கான முன்னாள் தூதுவர் நீதிபதி முகம்மட் தாஹிர் லப்பார் , வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நிகழ்வை IDMNC சர்வதேச உயர்கல்வி நிறுவனம் வெற்றிகரமாக ஏற்பாடு செய்தமை குறிப்பிடத்தக்கது.








