
QR குறியீடு மூலம் எரிபொருள் விநியோகம் ; எழுந்துள்ள சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு
QR குறியீட்டைப் பயன்படுத்தி எரிபொருள் பெற அறிமுகப்படுத்தப்பட்டுள்ள முறை தொடர்பாக எழுந்துள்ள சிக்கல்களை விரைவாகத் தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரசாங்க தகவல் துறை இயக்குநர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முன்னர் QR குறியீட்டைப் பெற்று தற்போது அதே வாகனம் மற்றும் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்தும் நபர்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் புதிய QR குறியீட்டை புதுப்பித்துக் கொள்ள முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேவேளை, வாகனம் அல்லது தொலைபேசி எண்ணை மாற்றியவர்கள் மற்றும் புதிதாக வாகனங்களை வாங்கியவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றை விரைவாக தீர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய சேவைகள் மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கான எரிபொருள் வழங்கல் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரச்சினைகள் தொடர்பாக மாலையில் முடிவுகள் எடுக்கப்பட்டு, அவற்றிற்கான தீர்வுகளை வழங்கும் பணிகள் இன்று (15)க்குள் மேற்கொள்ளப்படும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

