IRIS Dena கப்பல் மீது தாக்குதல் ; 104 பேர் உயிரிழப்பு

IRIS Dena கப்பல் மீது தாக்குதல் ; 104 பேர் உயிரிழப்பு

ஈரானின் போர்க்கப்பலான IRIS Dena மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 104 பேர் உயிரிழந்துள்ளதுடன், 32 பேர் காயமடைந்துள்ளதாக ஈரான் ராணுவம் தெரிவித்துள்ளது.

அமெரிக்கா நடத்தியதாகக் கூறப்படும் இந்த தாக்குதல் கடந்த மார்ச் 4ஆம் திகதி காலி துறைமுகத்திலிருந்து சுமார் 40 கடல் மைல் தொலைவில், இலங்கை கடற்பரப்பிற்கு அப்பால் இடம்பெற்றதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குப் பின்னர் போர்க்கப்பல் கடலில் விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது.

கப்பலில் இருந்தவர்களில் 35 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

காயமடைந்தவர்களில் 10 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 8 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும், தாக்குதலில் உயிரிழந்த 84 ஈரான் கடற்படையினரின் உடல்களுக்கு காலி தேசிய மருத்துவமனையில் அண்மையில் பிரேத பரிசோதனைகள் நடத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )