
கிணற்றில் தவறி விழுந்து 10 வயது சிறுவன் உயிரிழப்பு
பொல்பிதிகம – கிரிபமுனேகமய பகுதியில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 10 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செம்புகுலியா, கெகிராவை பகுதியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முதற்கட்ட விசாரணைகளின்படி, செம்புகுலியா பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது வீட்டின் பின்னால் பாதுகாப்பின்றி இருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பாக பொல்பிதிகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

