
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் குஷ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைதானவர் 27 வயதுடைய இந்திய பிரஜை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து 2 கிலோ கிராம் 762 கிராம் எடையுடைய குஷ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

