போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞன் கைது

போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞன் கைது

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்ததாக சந்தேகிக்கப்படும் இளைஞன் ஒருவரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்து வரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ந்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (15) மாலை பல்கலைக்கழக வளாகத்தில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து கொண்டிருந்த வேளையில் கோப்பாய் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான இளைஞனிடமிருந்து 41 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )