சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ; 25 ஆயிரம் ஓட்டல்கள் மூடல்

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ; 25 ஆயிரம் ஓட்டல்கள் மூடல்

ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடி நடவடிக்கையாக ஈரானும் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக அரபு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்காவின் ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும், ஈரான் ஹார்மூஸ் ஜலசந்தியை மூடியுள்ளதால் அந்த வழியாக எண்ணெய் சரக்கு கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இந்த நிலைமையால் இந்தியாவில் சமையல் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர்கள் ஓட்டல்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளுக்கு விநியோகம் செய்வது முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் பெங்களூருவில் மட்டும் சுமார் 50,000 ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் இயங்கும் நிலையில், அவற்றில் சுமார் 25,000 ஓட்டல்கள் மற்றும் உணவகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தினசரி உணவிற்காக ஓட்டல்களை நம்பியுள்ள மக்கள் இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )