மத்திய கிழக்கு போரின் தாக்கத்தைக் கையாள மூன்று முகாமைத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டன

மத்திய கிழக்கு போரின் தாக்கத்தைக் கையாள மூன்று முகாமைத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டன

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச சூழலால் நாடு எதிர்நோக்கக்கூடிய பொருளாதார நெருக்கடியை முகாமைத்துவம் செய்வதற்காக மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன மற்றும் அதற்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (17) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

மேலும் அவர், அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளை தடையின்றி மக்களுக்கு வழங்குவதற்கும், அந்த பணிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் ஒரு குழுவும், அரச சேவைகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கான பணிகளை முகாமைத்துவம் செய்வதற்கும் மற்றொரு குழுவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், எரிசக்தித் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் ஒரு குழுவை நியமிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )