
சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை ; ஒருவர் கைது
மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹால்பிட்டிய பகுதியில் சட்டவிரோத மதுபான உற்பத்திக்காக பயன்படுத்தப்பட்ட கோடாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரகஹஹேன பொலிஸார் நேற்று (16) மாலை மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது இந்த சட்டவிரோத உற்பத்தி நிலையம் கண்டறியப்பட்டது.
இதன்போது, சட்டவிரோத மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்ட 2,220 லீற்றர் கோடா பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் மொரகஹஹேன – வெல்மில்ல பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
CATEGORIES Sri Lanka

