
ஈரானுடனான யுத்தத்தில் நேட்டோவின் நிலைப்பாடு குறித்து டொனால்ட் ட்ரம்ப் அதிருப்தி
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் நேரடியாகப் ஈடுபடத் தங்களுக்கு விருப்பமில்லை என நேட்டோ நட்பு நாடுகள் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளன.
நேட்டோவின் நிலைப்பாட்டில் அதிருப்தி அடைந்த டிரம்ப் ,
தனது ‘Truth Social’ சமூக வலைதளப் பக்கத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
போருக்கு ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில் நேட்டோ நாடுகளின் உதவி தமக்குத் தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஈரானின் அணு ஆயுதத் தயாரிப்பைத் தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிக்கு நேட்டோ ஆதரவு அளித்தாலும், போரில் ஈடுபட அவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
இதன் காரணமாக, நேட்டோ அமைப்பில் அமெரிக்கா தொடர்ந்து நீடிப்பது குறித்து மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேட்டோவின் இராணுவ பலத்தில் சுமார் 70% அமெரிக்காவினுடையது. அமெரிக்கா விலகினால், ஐரோப்பிய நாடுகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ரஷ்யா போன்ற நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ஐரோப்பிய நாடுகள் தங்கள் இராணுவச் செலவுகளை பல மடங்கு அதிகரிக்க வேண்டியிருக்கும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

