தென்கொரியா ‘முக்கிய எதிரி நாடு’ என வடகொரியா அறிவிப்பு

தென்கொரியா ‘முக்கிய எதிரி நாடு’ என வடகொரியா அறிவிப்பு

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன் மூன்றாவது முறையாக பதவியேற்றதைத் தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் முக்கிய அரசியல் முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அந்த கூட்டத்தில், தென்கொரியாவை வடகொரியாவின் மிகப்பெரிய எதிரி நாடாக அதிகாரபூர்வமாக அறிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், இரு கொரிய நாடுகளும் அமைதியான முறையில் ஒன்றிணையலாம் என்ற முன்நிலை கொள்கைக்கு எதிராக அரசியலமைப்பில் முக்கிய திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதோடு, வடகொரியாவின் அணு ஆயுத அந்தஸ்தை எந்த சூழலிலும் கைவிட முடியாது என கிம் ஜாங் அன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகள் அணு ஆயுதங்களை கைவிட அழுத்தம் வழங்கி வரும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )