
நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு ; ஒரே நாளில் 931 பேர் கைது
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (25) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 931 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 931 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

