
ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்குக் கட்டணம் விதிக்கும் ஈரானின் திட்டத்திற்கு நாடாளுமன்றம் அனுமதி
ஹார்முஸ் நீரிணைவழியாகச் செல்லும் கப்பல்களுக்குப் போக்குவரத்து கட்டணம் விதிக்கும் திட்டத்திற்கு ஈரானிய நாடாளுமன்றக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் ஒருவர் இந்தத் திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன் கீழ் அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய கப்பல்கள் அந்த நீரிணை வழியாகச் செல்வதற்குத் தடை விதிக்கப்படும் என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கூடுதலாக, ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய நாடுகளுக்கும் இந்தத் தடை பொருந்தும் என அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓமானுடன் இணைந்து ஈரான் இந்த புதிய கட்டண முறையை நடைமுறைப்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உலகின் கச்சா எண்ணெய் தேவையில் சுமார் 20% பொதுவாக ஈரான் மற்றும் ஓமானுக்கு இடையில் அமைந்துள்ள இந்த முக்கியமான கடல் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது.
எவ்வாறாயினும், கப்பல் போக்குவரத்து புலனாய்வு நிறுவனமான Kpler இன் தரவுகளின்படி, போர் தொடங்கியதில் இருந்து இந்தப் பாதை வழியாக நடைபெறும் போக்குவரத்து சுமார் 95% சரிவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

