ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை

ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை

ரஷ்ய வெளியுறவுத்துறை பிரதி அமைச்சர் அண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko) இன்று (31) இலங்கைக்கு வருகை தருகிறார் .

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான
11வது இருதரப்பு அரசியல் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் நாட்டிற்கு வருகை தருவதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாட்டிற்கு வருகை தரும் ரஷ்ய வெளியுறவு பிரதி அமைச்சர், இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை , சமீபத்தில் ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சரும் இலங்கைக்கு விஜயம் செய்திருந்ததுடன், அங்கு இலங்கைக்கு கச்சா எண்ணெய் வழங்குவது தொடர்பாக பிரதி தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது.

எவ்வாறாயினும், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதைத் தடுக்க சதித் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

நேற்று (30) மாலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் நடைபெற்ற தீப்பந்தப் போராட்டத்தின் போது, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் டாக்டர் ஜி. வீரசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,
ரஷ்யாவிலிருந்து உடனடியாக எண்ணெய் இறக்குமதி செய்யுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகக் குறிப்பிட்டார்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )