சிறுவர், பெண்கள் பாதுகாப்பு கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

சிறுவர், பெண்கள் பாதுகாப்பு கோரி யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு போராட்டம்

ஈழத்தமிழர் மகளிர் சிறுவர் உரிமை பாதுகாப்பு மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டில், சிறுவர் மற்றும் சிறுமியர்களுக்கு எதிரான வன்கொடுமைகளை கண்டித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று (31) முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நல்லூர் பின் வீதியில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் பெண்கள் அதிகளவில் கலந்து கொண்டு, பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

இதன்போது, ‘தமிழினத்தின் விழுப்பே விடுதலையின் முதற்படி’, ‘இராணுவ வெளியேறு’, ‘போதை வஸ்து பாவனைகளை கட்டுப்படுத்து’ உள்ளிட்ட வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மேலும், பெண்கள் பாதுகாப்பு, சிறுவர்கள் பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு சமூக பிரச்சினைகள் தொடர்பாக கவனம் ஈர்க்கப்பட்டது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )