நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 914 பேர் கைது

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ; 914 பேர் கைது

ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, நேற்று (30) பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் சுமார் 914 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

அத்துடன், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 20 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளுக்கமைய 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, 922 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், இருவர் புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது சிக்கிய சந்தேக நபர்கள் வைத்திருந்த போதைப்பொருட்களையும் இதன்போது பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )