
வேகமாக சாப்பிடுபவரா நீங்கள் ?
காலையில் வேகமாக சாப்பிடும் வழக்கத்தை பலரும் பின்பற்றுகிறார்கள். வேகமாக சாப்பிடுவது மூளைக்கு லெப்டின் போன்ற ஹார்மோன்களை வெளியிட போதுமான நேரத்தை வழங்காது.
சாப்பிட்டதும் வயிறு நிரம்பிய உணர்வை அளித்ததும் இந்த ஹார்மோன்தான் உடலில் போதுமான எனர்ஜி இருப்பதாக மூளைக்கு சமிக்ஞை செய்யும்.
வேகமாக சாப்பிடும்போது இந்த ஹார்மோன் முடங்கி, மூளைக்கு தாமதமாக தகவல் அனுப்பும். அதனால் இன்னும் பசியுடன் இருப்பதாக நினைத்து அதிகம் சாப்பிட மூளையும் அனுமதித்துவிடும்.
வேகமாக சாப்பிடுவது உடலுக்கு உண்மையில் தேவைப்படுவதை விட அதிகம் சாப்பிட வைத்துவிடும். செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வாயுத்தொல்லை ஏற்படக்கூடும்.
CATEGORIES Lifestyle

