
கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிள் – மோட்டார் கிரேடர் வாகனம்மோதி 18, 19 வயது இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு.!
கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பரந்தன் – முல்லைத்தீவு (A35) வீதியில்,தர்மபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் நேற்றிரவு இடம்பெற்ற கோர விபத்தில் 18, 19 வயது இளைஞர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
Motor Grader வாகனத்துடன், பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .
ஜரின் கனிஸ்ரன் (வயது -19) தியாகராசா விக்கினேஸ்வரன் (வயது-18) ஆகிய இரண்டு இளைஞர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

