ஈரான் போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை                                    350ஐ கடந்துள்ளதாக பெண்டகன் தெரிவிப்பு

ஈரான் போரில் காயமடைந்த அமெரிக்க வீரர்களின் எண்ணிக்கை 350ஐ கடந்துள்ளதாக பெண்டகன் தெரிவிப்பு

அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து ஈரானுக்கு எதிரான போரை ஆரம்பித்த கடந்த பிப்ரவரி 28ஆம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில், 350-க்கும் மேற்பட்ட அமெரிக்கப் படைவீரர்கள் காயமடைந்துள்ளனர்.

பென்டகன் வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, தரைப்படை, விமானப்படை, கடற்படை மற்றும் மரைன் (Marine) ஆகிய நான்கு பிரிவுகளையும் சேர்ந்த 365 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

இவர்களில் அதிகளவானோர் தரைப்படையைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், அந்த எண்ணிக்கை 247 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, 63 கடற்படை வீரர்களும், 19 மரைன் வீரர்களும் மற்றும் 36 விமானப்படை வீரர்களும் காயமடைந்துள்ளனர்.

மேலும், இந்தப் புள்ளிவிபரங்களின்படி, இந்தப் போர் காரணமாக இதுவரை 13 அமெரிக்க வீரர்கள் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
TAGS
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus ( )